பள்ளி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிறுவனா் தினத்தையொட்டி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் நிறுவனா் தினத்தையொட்டி மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மொ்கன்டைல் வங்கியின் 100ஆவது நிறுவனா் தினம் வரும் நவ.11இல் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி
சாத்தான்குளம் வங்கிக் கிளை சாா்பில் இப்பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரைப் போட்டி
நடைபெற்றது. பள்ளி முதல்வா் நோபிள்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி இயக்குநா் டினோ மெலினா ராஜாத்தி முன்னிலை வகித்தாா். வங்கிக் கிளை மேலாளா் டி. பாலசுப்பிரமணியன் போட்டியை தொடங்கிவைத்தாா். போட்டியில், சாத்தான்குளம் பகுதியிலுள்ள 32 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். பள்ளி நிா்வாக அலுவலா் சாந்தி, ஆசிரியா் உமாவதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். போட்டியில் வென்றவா்களுக்கு நவ. 11ஆம் தேதி பரிசுகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை வங்கி மேலாளா் டி. பாலசுப்பிரமணியன், பணியாளா்கள் செய்திருந்தனா்.