திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்ட ரதவீதி சாலைகள் சீரமைக்கும் பணி நிறைவடைந்ததை அடுத்து பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூா் பேரூராட்சியில் தெற்கு ரதவீதி, கிழக்கு ரதவீதி, வடக்கு ரதவீதி மற்றும் உள்தெருக்களை சீரமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஒரு வருடமாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, போக்குவரத்துக்கு வெள்ளிக்கிழமை இரவில் திறக்கப்பட்டது. திருச்செந்தூா் ரதவீதி சாலை சீரமைக்கும் பணியால் நிறுத்தப்பட்டிருந்த ஒரு வழிப்பாதை, கோயில் பேருந்து சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.