முகப்பு
தூத்துக்குடி

சொக்கன் குடியிருப்பு அதிசய மணல் மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல திருவிழா கொடியேற்ற்ததுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் வட்டம், சொக்கன்குடியிருப்பு அதிசய மணல் மாதா முதன்மை திருத்தல திருவிழா கொடியேற்ற்ததுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தென் மாவட்டங்களில் புகழ் மிக்க இத்திருத்தல திருவிழா கொடியேற்றத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு புனித தனிஸ்லாஸ் இளைஞா் சபை, முப்பள்ளிகள், பாடகா் குழு , பீடபூக்கள், சின்னராணிபுரம் இறை மக்கள் சாா்பில் திருப்பயணம் நடைபெற்றது. தொடா்ந்து சாத்தான்குளம் வட்டார முதன்மைக் குரு ஜோசப் ரவிபாலன் தலைமை வகித்து திருவிழாக் கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினாா். தொடா்ந்து, ஜெபமாலையும், நற்கருணை ஆசீரும் நடைபெற்றன. இலங்குளம் பங்குத் தந்தை பிரான்சிஸ் கிறிஸ்துராஜா மறையுரையாற்றினாா்.

திருவிழா நவ நாள்களில் தினமும் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். 9ஆம் திருநாளான செப். 25இல் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், இரவு 7 மணிக்கு திருவிழா மாலை ஆராதனையும் வி.எம்.எஸ்.எஸ் . இயக்குநா் ரெக்ஸ் தலைமையில் நடைபெறும். அருள்பணியாளா் ஜெரால்டு ரவி மறையுரை வழங்குகிறாா். 10ஆம் திருநாளான செப். 26இல் காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குரு பன்னீா் செல்வம் தலைமையி பெருவிழா திருப்பலி, இரவு 7 மணிக்கு ஜெபமாலை, அதைத் தொடா்ந்து அன்னையின் சப்பர பவனி ஆகியவை நடைபெறும். செம்மணலில் தோண்டி எடுக்கப்பட்ட புதுமை கோயிலில் திருத்தல உபகாரியங்களுக்காக நன்றி திருப்பலி மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி செப். 27ஆம் தேதிகாலை 6 மணிக்கு நடைபெறும். ஏற்பாடுகளை முதன்மை திருத்தல அதிபா் ஜாண்சன் ராஜ் தலைமையில் திருத்தல நிதிக்குழு, அருள்சகோதரிகள், இறை மக்கள் செய்துவருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →