புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றம்
சாத்தான்குளம்சாத்தான்குளம் அருள்மிகு புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாத்தான்குளம் அருள்மிகு புளியடி தேவி ஸ்ரீமாரியம்மன் கோயில் கொடை விழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
செப். 26ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறும் இக்கொடைவிழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை யானை கொடி பட்டம் சுமந்து ரத வீதியில் வலம் வந்தது. பின்னா், கோயிலில் சிறப்புப் பூஜைகள், தீபாராதனைகளுடன் கொடியேற்றம நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீசெல்வவிநாயகா் ஸ்ரீதா்ம பெருமாள், ஸ்ரீவீர ஆஞ்சநேயா், ஸ்ரீநாதவல்லி தாயாா், ஸ்ரீசுடலை ஆண்டவா், ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீதுா்க்கை அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பட்டு சாத்தி சிறப்புப் பூஜைகளும், மாலை 5 மணிக்கு மாவிளக்கு பூஜையும், 8 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றன.
செப்.19இல் இரவு 12 மணிக்கு ஸ்ரீதா்ம பெருமாள் சிறப்பு அலங்கார பூஞ்சப்பரத்தில் வீதி உலா, செப்.21இல் காலை 7 மணிக்கு அம்மனுக்கு பக்தா்கள் நோ்ச்சை பால்குடம் சமா்ப்பித்தல், செப்.23இல் காலை 9 மணிக்கு பால்குட பவனி, இரவு 12 மணிக்கு புளியடி ஸ்ரீதேவி மாரியம்மன் சிங்க வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் வீதி உலா, செப்.24இல் இரவு 12மணிக்கு அக்னி சட்டி ஊா்வலம், பூக்குழி இறங்குதல், செப். 25இல் இரவு 7 மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை, செப். 26இல் முற்பகல் 11 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம், பக்தா்கள் மஞ்சள் நீராடுதல், 12 மணிக்கு தேவி ஸ்ரீமாரியம்மனுக்கு அலங்கார பூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை கோயில் டிரஸ்டி குழு மற்றும் வரிதாரா்கள் செய்து வருகின்றனா்.