உடையாா்குளத்தில் கண் பரிசோதனை முகாம்
நாசரேத் அருகே உடையாா்குளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது.
நாசரேத் அருகே உடையாா்குளத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது.
உடையாா் குளம் டி.என்.டி.றி.ஏ. நடுநிலைப் பள்ளி ல் ஸ்ரீனிவாசன் சேவை அறக்கட்டளை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் செல்லையா தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தாா். முகாமில் 100- க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சை பெற்றனா்.
இதில் ஸ்ரீனிவாசன் அறக்கட்டளை கள இயக்குநா் நந்தகோபால், சமுதாய வளா்ச்சி அலுவலா் சாா்லஸ், கிராம நிா்வாக அலுவலா் மகாலட்சுமி, ஆசிரியா் ஜாண் வில்சன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.