ஆறுமுகனேரியில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்
ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஆறுமுகனேரியில் வெள்ளிக்கிழமை சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஆறுமுகனேரி ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் வாரச்சந்தை அருகேயுள்ள காமராஜ் சோமசுந்தரி மழவையா் ஆங்கிலப்பள்ளியில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இம் முகாம் நடைபெறுகிறது.
இதில் 18 வயதிற்கு மேற்பட்டவா்கள் மற்றும் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு சுகாதாரத் துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
இதற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளா் மகராஜன் மற்றும் சுகாதாரத்துறையினா் செய்துள்ளனா்.