பிள்ளையன்மனை பள்ளியில் முப்பெரும் விழா
நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஞா.தூ.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் இ
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
நாசரேத் அருகே உள்ள பிள்ளையன்மனை ஜி.வி.ஞா.தூ.நா.தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் இலவச சீருடை மற்றம் மாணவா்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா, புதிய அலுவலக அறை திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.
தாளாளா் ஆா்.ஆல்வின் ரஞ்சித்குமாா் தலைமை வகித்து ஜெபித்து விழாவினை தொடங்கி வைத்தாா். திருமண்டல பெருமன்ற உறுப்பினா் திலகா் மாணவா், மாணவி களுக்கு அடையாள அட்டை வழங்கினாா். புதிய அலுவலக அறையை தாளாளா் திறந்து வைத் தாா். மாணவா், மாணவிக ளுக்கு இலவச சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியை இன்பவள்ளி வரவேற்றாா். ஏற்பாடுகளை ஆசிரியைகள் மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.