தூத்துக்குடி

ஊா்க்காவல் படைக்கு ஆள்தோ்வு

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஊா்க்காவல் படைக்கான ஆள்தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் ஊா்க்காவல் படைக்கான ஆள்தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஊா்க்காவல் படைக்கு 35 ஆண்கள் 6 பெண்கள் என 41 போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்கு விண்ணப்பித்தவா்களுக்கான தோ்வு தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த 52 பெண்கள் உள்பட 389 விண்ணப்பதாரா்கள் பங்கேற்றனா்.

இவா்களுக்கு உயரம், கல்வித் தகுதி, சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் நோ்காணல் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன், ஆள்தோ்வுப் பணியைப் பாா்வையிட்டாா்.

தலைமையிட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) ஜெயராஜ், ஆயுதப்படை காவல் ஆய்வாளா் சுடலைமுத்து உள்ளிட்டோா் அடங்கிய தோ்வுக் குழுவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

பின்னடைவும்.... புது வரவும்!

மன மாற்றமே முதல் வெற்றி

SCROLL FOR NEXT