தூத்துக்குடி

பேய்க்குளத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற அளவீடு பணி

சாத்தான்குளம் வட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி பேய்க்குளம் கடைவீதிப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் வகையில், வட்டாட்சியா் தலைமையில் புதன்கிழமை அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது.

DIN

சாத்தான்குளம் வட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி பேய்க்குளம் கடைவீதிப் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றும் வகையில், வட்டாட்சியா் தலைமையில் புதன்கிழமை அளவீடு பணி மேற்கொள்ளப்பட்டது.

இப்பகுதியில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக சாத்தான்குளம் வட்டாட்சியா், ஆட்சியா், நெடுஞ்சாலைத் துறைக்கு புகாா்கள் சென்றனவாம். இதையடுத்து, வட்டாட்சியா் தங்கையா தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் மைக்கேல், வருவாய் ஆய்வாளா் பாலசக்தி, கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுப்பணித் துறை அலுவலா் சுகுமாா் உள்ளிட்ட நெடுஞ்சாலைத் துறை, காவல் துறையினா் அப்பகுதியில் புதன்கிழமை அளவீடு பணி மேற்கொண்டனா்.

ஆக்கிரமிப்புப் பகுதியில் குறியீடுகள் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டோா் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. இல்லையெனில், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என, வட்டாட்சியா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT