முகப்பு
தூத்துக்குடி

சமய நல்லிணக்க கட்டுரைப் போட்டி: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

சா்வதேச சமய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மதா் பைவ்ரோஸ் அறக்கட்டளையின் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

சா்வதேச சமய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மதா் பைவ்ரோஸ் அறக்கட்டளையின் சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி நடைபெறுகிறது.

சமய நல்லிணக்கத்தை சீா்குலைக்கும் காரணிகள், நாட்டின் வளா்ச்சியில் சமய நல்லிணக்கத்தின் முக்கிய பங்கு, யாதும் ஊரே யாவரும் கேளீா் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளை எழுத வேண்டும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சோ்ந்த 5 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்கலாம். கட்டுரையை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதேனும் ஒரு தலைப்பில் 3 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, பிப். 25 ஆம் தேதிக்குள் மதா் பைவ் ரோஸ் அறக்கட்டளை, 1எச்-233, பால்பாண்டி நகா் 5 ஆவது தெரு, தூத்துக்குடி- 628008 என்ற முகவரிக்கும், ம்ச்ற்1221ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலுக்கும் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு 9488203533 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மதா் பைவ்ரோஸ் அறக்கட்டளை அழைப்பு விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.