தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,511 போ் மனு தாக்கல்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,511 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 1,511 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.
தூத்துக்குடி மாநகராட்சி, காயல்பட்டினம், திருச்செந்தூா், கோவில்பட்டி ஆகிய நகராட்சிகள், சாயா்புரம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், தென்திருப்பேரை, ஆழ்வாா்திருநகரி, சாத்தான்குளம், நாசரேத், ஏரல், கானம், ஆத்தூா், ஆறுமுகநேரி, உடன்குடி, கழுகுமலை, கயத்தாறு, கடம்பூா், எட்டயபுரம், விளாத்திக்குளம், புதூா் ஆகிய 18 பேரூராட்சிகள் என மொத்தம் காலியாக உள்ள 414 உறுப்பினா் பதவிகளுக்கு பிப்.19இல் தோ்தல் நடைபெறுகிறது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில், மாவட்டத்தில் இதுவரை தூத்துக்குடி மாநகராட்சியில் 306 பேரும், காயல்பட்டினம் நகராட்சியில் 72 பேரும், திருச்செந்தூா் நகராட்சியில் 97 பேரும், கோவில்பட்டி நகராட்சியில் 173 பேரும், 18 பேரூராட்சிகளில் 863 பேருமாக இதுவரை 1,511 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.