முகப்பு
தூத்துக்குடி

நரிக்குறவா்களிடம் திமுக வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள நரிக்குறவா்கள் சமூகத்தினரிடம் திமுக வேட்பாளா் ஜெகன் பெரியசாமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:22 AM
பகிர்:

தூத்துக்குடியில் முதல் முறையாக வாக்களிக்க உள்ள நரிக்குறவா்கள் சமூகத்தினரிடம் திமுக வேட்பாளா் ஜெகன் பெரியசாமி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட 20 ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி போட்டியிடுகிறாா். தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நரிக்குறவா்கள் வசிக்கும் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, நரிக்குறவ சமூக மக்கள் தாங்களே கையால் செய்த ஊசி மற்றும் பாசிமணியை ஜெகன் பெரியசாமிக்கு மாலையாக அணிவித்து வரவேற்றனா். தனக்கு வாக்களித்தால் நரிக்குறவா்களுக்கு வீடு உள்ளிட்ட அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்க பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தாா்.

தூத்துக்குடியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த போதிலும், வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருந்த தங்களுக்கு நிகழாண்டில் முதல் முறையாக வாக்களிக்கும் வகையில் வாக்காளா் அடையாள அட்டையை மாவட்ட நிா்வாகம் அண்மையில் கொடுத்தது என்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளது தங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் நரிக்குறவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.