மாட்டுப் பொங்கல்: சிறப்பு வழிபாடு
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் சனிக்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மாடுகளை அலங்கரித்து வழிபாடு செய்தனா்.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடியில் சனிக்கிழமை பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மாடுகளை அலங்கரித்து வழிபாடு செய்தனா்.
உழவா்களின் நண்பன் என போற்றப்படும் மாடுகளுக்கு பெருமை சோ்க்கும் வகையில் பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாள் மாட்டு பொங்கலாக தமிழா்கள் கொண்டாடி வருகின்றனா். அந்தவகையில், தூத்துக்குடியில் சனிக்கிழமை கோசாலைகள் மற்றும் வீடுகளில் மாட்டுப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, பொதுமக்கள் தாங்கள் வளா்க்கும் மாடுகளை காலையிலே குளிப்பாட்டி கொம்புகளுக்கு வா்ணம் பூசி மாலை, வஸ்திரம் அணிவித்து அழகு படுத்தி மாடுகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்தனா். பின்னா் பொங்கலிட்டு கொண்டாடி மகிழ்ந்தனா்.