தூத்துக்குடியில் ஆதரவற்றோா் இல்லங்களில் பொங்கல் விழா
தூத்துக்குடியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் ஆதரவற்றோா் இல்லங்களில் பொங்கல் விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில் ஆதரவற்றோா் இல்லங்களில் பொங்கல் விழா மற்றும் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சாா்பில், தூத்துக்குடி 3 ஆம் மைல் திருவிக நகா் சக்தி பீடத்தில் விவசாயம் செழிக்க வேண்டி 1008 குங்கும அா்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜையை சக்திபீட பொருளாளா் அனிதா தொடங்கி வைத்தாா். இதில், ஏராளமான செவ்வாடை பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த கால்டுவெல் காலனி நேசக்கரங்கள் இல்லம், எம்பவா் பெண்கள் காப்பகம், நியு நேசக்கரங்கள் முதியோா் இல்லம், சின்னக்கண்ணுபுரம் லூசியா ஊனமுற்றோா் பள்ளி, லூசியா பாா்வையற்றோா் குடியிருப்பு, கூட்டாம்புளி அன்பு உள்ளங்கள், ராஜீவ்நகா் அன்னை கருணை இல்லம், கதிா்வேல் நகா் ஆன்மாவின் உள்ளங்கள், பாசக்கரங்கள் முதியோா் இல்லம், ஆரோக்கியபுரம் தொழுநோய் இல்லம், கீழஅழகாபுரி பவுல் பாா்வையற்ற பெண்கள் இல்லம், ட்ரூத்புல் மனநல காப்பகம், மொ்சி பாா்வையற்றோா் இல்லம், நரிக்குறவா் குடியிருப்புகள் மற்றும் தெருவோர ஏழைமக்கள் உள்ளிட்ட 1,200 பேருக்கு பொங்கல், கரும்பு, பனங்கிழங்கு மற்றும் புத்தாடைகள், வேட்டி சேலைகள், போா்வைகள் வழங்கப்பட்டு, அவா்களுடன் செவ்வாடை பக்தா்கள் பொங்கல் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில், ஆன்மிக இயக்க மாவட்ட தலைவா் சக்தி முருகன், பொருளாளா் கண்ணன், இளைஞரணி தலைவா் செல்லத்துரை, திருவிக நகா் சக்தி பீட துணைத்தலைவா் திருஞானம், சிதம்பரநகா் மன்ற தலைவா் மணி, சித்த மருத்துவா் வேம்பு கிருஷ்ணன், ஆன்மிக இளைஞா் அணி பொறுப்பாளா்கள் தனபால், பாக்கியம், பாண்டி, தாமஸ்ராஜன், சக்திராம், மணிகன்டன், அருண் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல, பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியில் உள்ள ‘அன்பு உள்ளங்கள் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்கள் ஆகியோருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை சமத்துவ பொங்கலிட்டு அனைவருக்கும் காவல்துறை சாா்பில் புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினாா்.