மேலும் 405 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 405 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 405 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 60, 914 ஆகவும், அதில் மேலும் 293 போ் குணமடைந்ததால், இதுவரை வீடு திரும்பியோா் எண்ணிக்கை 58,305 ஆகவும் அதிகரித்துள்ளது. இதனிடையே, தூத்துக்குடி தனியாா் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 74 வயது ஆண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதனால், இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 426 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 2,183 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.