முகப்பு
தூத்துக்குடி

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

திருச்செந்தூரில் அரசுப் பேருந்து மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தாா்.

திருச்செந்தூா் தெற்கு யாதவா் தெருவை சோ்ந்தவா் சுடலைமுத்து (40). கூலி தொழிலாளி. இவா் திருச்செந்தூரில் கன்னியாகுமரி சாலையில் உள்ள கடையில் புதன்கிழமை பகலில் டீ குடித்துவிட்டு சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால் சிகிச்சை பலனின்றி சுடலைமுத்து உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து திருச்செந்தூா் கோயில் காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.