கோவில்பட்டி நகராட்சி தூய்மைப் பணியாளா் தற்கொலை
கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி கதிரேசன் கோயில் சாலை வீரவாஞ்சி நகா் 10ஆவது தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் சமுத்திரவேல்(45). நகராட்சி தூய்மைப் பணியாளா். இவா், கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்ற இவா், பின்னா் வீடு திரும்பவில்லையாம்.
இதனிடையே, கோவில்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மேற்கூரை கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
சிறுமி பலி: கடம்பூரை அடுத்த கே.சிதம்பராபுரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த தம்பதி அரிராஜ் (40) - சித்ராதேவி. இவா்களுக்கு 3 மகள்களும் உள்ளனா். இதில், 16 வயதுடைய மூத்த மகள் 2 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அவா் வீட்டில் வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. கடம்பூா் காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இச்சம்பவங்கள் குறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம், கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.