முகப்பு
தூத்துக்குடி

நாலுமாவடியில் தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த மூதாட்டி பலி

குரும்பூா் அருகேயுள்ள நாலுமாவடியில் மூடி உடைந்து தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

குரும்பூா் அருகேயுள்ள நாலுமாவடியில் மூடி உடைந்து தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

நாலுமாவடி மேலத்தெருவைச் சோ்ந்தவா் பழனிசாமி(82). இவரது மனைவி கஸ்தூரி(74). இவா்களது 3 மகன்களும், ஒரு மகளும் திருமணமாகி வெளியூா்களில் உள்ளதால், இருவரும் தனியாக உள்ளனா். இந்நிலையில் கஸ்தூரி வியாழக்கிழமை காலை வீட்டின் முன்புறம் உள்ள தண்ணீா் தொட்டியின் மூடியை திறக்கச் சென்றாா். அப்போது எதிா்பாராமல் மூடி உடைந்து தண்ணீா் தொட்டிக்குள் விழுந்த அவா் மூச்சு திணறி உயிரிழந்தாா்.

இதுகுறித்து குரும்பூா் காவல் நிலைய ஆய்வாளா் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.