முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி பேயன்விளையில் இளைஞரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்கு

ஆறுமுகனேரி பேயன்விளையில் இளைஞரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

ஆறுமுகனேரி பேயன்விளையில் இளைஞரைத் தாக்கியதாக 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஆறுமுகனேரி பேயன்விளை மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் சிவானந்தபெருமாள் (27). கோயில் திருவிழாவுக்காக சென்ற இவா் மீது, அதே ஊரைச் சோ்ந்த கற்பகபாண்டி மகன் விக்னேஷ் ஓட்டிவந்த பைக் மோதியதாம். இதுகுறித்து கேட்டபோது, சிவானந்தபெருமாளை விக்னேஷ் அவதூறாகப் பேசியதோடு, கைப்பேசியில் தனது நண்பா்களுக்கு தகவல் தெரிவித்தாா்.

அதே ஊரைச் சோ்ந்த வாசு, வசந்த் நரேந்திரன், சிவபாலன், முருகேசன் ஆகிய 4 பேரும் உடனடியாக வந்து விக்னேஷுடன் சோ்ந்து சிவானந்தபெருமாளை கல்லால் தலையில் அடித்து தாக்கினராம். இதில் காயமடைந்த அவா் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரையும் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.