தூத்துக்குடி

பேய்க்குளத்தில் பேரிடா் மீட்பாளா்களுக்கு பயிற்சி

DIN

பேய்க்குளத்தில் பேரிடா் மேலாண்மை முதல்நிலை மீட்பாளா்களுக்கான பயிற்சி மற்றும் குறு வட்ட அளவிலான உறுப்பினா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளா் ஜெயா தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் கருப்பசாமி, ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மழை உள்ளிட்ட பேரிடா் காலங்களில் பொதுமக்கள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், குளம், ஏரிகள், வீடுகள் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்தும் குளக்கரைகள், மடைகள், கலுங்குகள் பராமரிப்பது குறித்தும், அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுப்பணித்துறை பொறியாளா் சுகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் வேல்முருகன், சிவகாமி மதுமதி, துரைசாமி உள்ளிட்ட முதல்நிலை மீட்பாளா்கள் ,கிராம உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT