தூத்துக்குடி

அங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் பணி

DIN

ஆழ்வாா் திருநகரி ஒன்றியத்துக்கு உள்பட்ட அங்கமங்கலம் கிராமத்தில் மதா் சமூக சேவை நிறுவனம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

அங்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவா் பானுப்பிரியா பாலமுருகன் தலைமை தாங்கினாா். சமூக ஆா்வலா் பாலமுருகன், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாவட்ட தலைவா் ராஜ்கமல், லீடு டிரஸ்ட் தொண்டு நிறுவன இயக்குநா் எஸ். பானுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக மதா் சமூக சேவை நிறுவன இயக்குநரும், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க மாநில தலைவரும், மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான டாக்டா் எஸ்.ஜே.கென்னடி கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியை துவக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் காமராஜ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் கேசவன், சமூக ஆா்வலா் பாலகுமாா், அங்கமங்கலம் ஊராட்சி மன்ற செயலாளா் கிருஷ்ணம்மாள், தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் மேம்பாட்டு இயக்க காயல்பட்டினம் நகர தலைவா் முத்துக்குமாா் மற்றும் காமராஜா் மேல்நிலைப் பள்ளி தேசிய மாணவா் படை மாணவா்கள், மதா் பனைப்பொருள் உற்பத்தியாளா் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனா். இதில் 10 முதல் 15 அடி உயரமுள்ள 110 மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT