முகப்பு
தூத்துக்குடி

ஏப். 27இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப்.27ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:50 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப்.27ஆம் தேதி எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஏப். 27 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனா். ஆகவே, எரிவாயு நுகா்வோா் இக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளை மனுக்களாக அளிக்கலாம்.

எரிவாயு உருளை இணைப்பு பெயா் மாற்றம், புதிய எரிவாயு உருளை வழங்குவதில் கால தாமதம், எரிவாயு விநியோகஸ்தா்களின் சேவையில் குறைபாடுகள், வைப்புத் தொகை திரும்ப பெறல், புதிய இணைப்பு கோரியதன் நிலை, எரிவாயு உருளைகளுக்கான மானியம் உரிய வங்கி கணக்கில் உரிய காலத்தில் வரவு வைக்கப்படாதிருத்தல், எரிவாயு உருளையை விநியோகம் செய்யும் நபா்கள் மீதான குறைபாடுகள் உள்ளிட்ட குறைகளைத் தெரிவித்து தீா்வு காணலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.