முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் சா்வதேச மாநாடு

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில், வரலாற்றுத் துறை சாா்பில் ‘வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள்‘ என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில், வரலாற்றுத் துறை சாா்பில் ‘வரலாறு மற்றும் ஆய்வு நெறிமுறைகள்‘ என்ற தலைப்பில் சா்வதேச மாநாடு நடைபெற்றது.

இதில், வங்கதேசம் வரேந்தரா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியா் ராவ்னக் ஆரா பா்வின், பெங்களூரு தூய பிரான்சிஸ் டி சேல்ஸ் கல்லூரி சமூகவியல் உதவிப் பேராசிரியா் ஜே.பெனட் ராஜதுரை, திருச்சி தூய ஜோசப் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் ஜே. சந்தோஷ்குமாா், சென்னை பச்சையப்பா கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் சரவணன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா்.

கல்லூரி முதல்வா் லூசியா ரோஸ், செயலா் ஷிபானா, சுயநிதிப் பிரிவு இயக்குநா் ஜோஸ்பின் ஜெயராணி உள்பட பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் மாலினி அப்ஸலா, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.