வேலவன் வித்யாலயா பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வேலவன் வித்யாலயா பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்குப் பள்ளித் தாளாளா் ஆனந்த் தங்கவேல், தலைமை ஆசிரியை ஷகிலா ஆனந்த் ஆகியோா் தலைமை வகித்தனா். தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, சாலை பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவா்களுக்கு
விளக்கினா். பின்னா் சாலை பாதுகாப்பு குறித்து மாணவா்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவா்-மாணவிகள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.