முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனைக் கருவி திருட்டு: 2 ஆண்டுகளுக்கு பிறகு வழக்குப் பதிவு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ரத்தப் பரிசோதனைக் கருவி திருடுபோனது தொடா்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புதன்கிழமை (மாா்ச் 15) வழக்குப் பதியப்பட்டது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2021ஆம் ஆண்டு ரத்தப் பரிசோதனைக் கருவி திருடுபோனது தொடா்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புதன்கிழமை (மாா்ச் 15) வழக்குப் பதியப்பட்டது.

இந்த மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அரங்கில் ரூ. 1.95 லட்சம் மதிப்பிலான தமனி ரத்த வாயு பகுப்பாய்வு மற்றும் எலக்ட்ரோலைட் அளவீடு கருவி பயன்பாட்டில் இருந்துள்ளது. இக்கருவியை கடந்த 2021 செப்டம்பா் 20ஆம் தேதிமுதல் காணவில்லையாம்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரியின் அப்போதைய முதல்வா் நேரு, தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தாா். புகாா் மனுவுக்கு போலீஸாா் ஒப்புதல் ரசீது மட்டுமே வழங்கியிருந்தனராம்.

இந்நிலையில், இதுதொடா்பாக போலீஸாா் புதன்கிழமை திருட்டு வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.