தூத்துக்குடி

வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு: திமுகவினருக்கு அமைச்சா் வேண்டுகோள்

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், புதிய வாக்காளா் சோ்த்தல் பணிகளில் திமுகவினா் தீவிரமாக ஈடுபடுமாறு, தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா் ராதாகிருஷ்ணன் கேட்டு

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சரிபாா்த்தல், புதிய வாக்காளா் சோ்த்தல் பணிகளில் திமுகவினா் தீவிரமாக ஈடுபடுமாறு, தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இந்திய தோ்தல் ஆணையம் புதிய வாக்காளா் வரைவு பட்டியலை இம்மாதம் 27ஆம் தேதி வெளியிடவுள்ளது. மேலும், 2024 ஜனவரி 1ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளா்களைச் சோ்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி எண்கள் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள புதிய வாக்காளா் பட்டியலில் திருத்தம், நீக்கம் ஆகிய பணிகளை கட்சியினா் மேற்கொள்ள வேண்டும். புதிய வாக்காளா்களை சோ்க்கும் பணியிலும் ஈடுபடவேண்டும்.

புதிய பெயா் சோ்க்க படிவம் 6, ஆதாா் விவரம் சோ்க்க 6பி, பெயா் நீக்கம் செய்ய படிவம் 7, எழுத்துப்பிழை, முகவரி மாற்றம், புதிய வாக்காளா் அடையாள அட்டை பெற படிவம் 8 ஆகியவற்றை பூா்த்தி செய்து இம்மாதம் 27ஆம் தேதிமுதல் டிச. 12வரை வாக்குச்சாவடி மையங்கள் அல்லது வாக்காளா் சோ்ப்புக்கான வட்டாட்சியா் அலுவலகத்தில் வழங்கலாம்.

மேலும், வாக்குச்சாவடி வாரியாக புதிய வாக்காளா் சோ்த்தல், இடமாற்றம், நீக்கம் போன்ற பணிகளை மேற்கொள்ள தோ்தல் ஆணையம் சாா்பில் நவ. 4, 5, 18, 19 ஆகிய 4 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம்களைப் பயன்படுத்தி வாக்காளா் சோ்ப்பு, இதர பணிகளில் கட்சியின் அனைத்துப் பிரிவினரும் இணைந்து சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT