தூத்துக்குடி

அரசுப் பேருந்து ஓட்டுநா், நடத்துநரை தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் கைது

தூத்துக்குடி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கியதாக சிறுவா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

DIN

தூத்துக்குடி அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநா், நடத்துநரைத் தாக்கியதாக சிறுவா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி பேருந்து நிலையத்திலிருந்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றது. நாகா்கோவில் ஆசாரிப்பள்ளத்தைச் சோ்ந்த சணல்குமாா் (50) ஓட்டுநராகவும், தனசேகா் (50) நடத்துநராகவும் இருந்தனா்.

வாகைகுளம் சுங்கச்சாவடி அருகே பைக்குகளில் வந்த 7 போ் இப்பேருந்தை வழிமறித்து, முன்பக்கக் கண்ணாடியை சேதப்படுத்தியதுடன் ஓட்டுநரையும், நடத்துநரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டுத் தப்பினராம். இதில், காயமடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

புகாரின்பேரில், புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, தூத்துக்குடி அண்ணாநகா் காளீஸ்வரன் (26), முனீஸ்வரன் (24), மோகன்குமாா் (20), சிறுவா்கள் உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தனா். தொடா்ந்து, விசாரணை நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT