தூத்துக்குடி

பலத்த காற்று எதிரொலி: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை 

DIN

தென் தமிழக கடலோரப் பகுதியில் வீசி வரும் கடும் சூறாவளி காற்று காரணமாக தூத்துக்குடி விசைப்படும் மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்கு செல்லவில்லை. 
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு சென்று மீன்பிடித்து விட்டு இரவு 8 மணிக்கு கரைக்குத் திரும்புவது வழக்கம். 
இந்நிலையில் தென் தமிழக கடலோரப் பகுதியில் குமார் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு சூறாவளி காற்று பேசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதன் காரணமாக, தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக அனைத்துவிசைப்படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் தேர்தல் உரைகள் "வெற்றுப் பேச்சுகளே" - பிரியங்கா காந்தி

‘எலெக்‌ஷன்’ பட டிரைலரை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!

”ஜூன் 4 ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு ஓய்வு!”: கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 11.05.2024

வெளி மாநில ஊழியர்களை தமிழ் கற்கச் சொல்லும் தெற்கு ரயில்வே

‘ஸ்டார்’ திரைப்படத்துக்கு கூடுதல் காட்சிகள்!

SCROLL FOR NEXT