தூத்துக்குடி

வெங்கடேஷ் பண்ணையாா் நினைவு தினம்: இன்று சில வட்டங்களில் டாஸ்மாக் மூடல்

வெங்கடேஷ் பண்ணையாா் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் மட்டும் மூடப்படுவதாக மாவட்ட

DIN

தூத்துக்குடி: வெங்கடேஷ் பண்ணையாா் நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமை (செப்.26) ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் அருகேயுள்ள அம்மன்புரம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.26) வெங்கடேஷ் பண்ணையாா் 20 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து, அன்றைய தினம், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, சாத்தான்குளம், ஏரல், திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம் ஆகிய வட்டங்களில் அமைந்துள்ள 68 டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபானக் கடையுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

தருமபுரம் ஆதீனம் தனுா் மாத வழிபாடு தொடக்கம்

மன்ரேகா திட்டத்தின் பெயா் மாற்றத்திற்கு எதிராக சென்னையில் போராட்டம்

1971 போா் வெற்றி தினம்: உயிா் நீத்த வீரா்களுக்கு குடியரசுத் தலைவா், பிரதமா் மரியாதை

SCROLL FOR NEXT