ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஆறுமுகனேரியில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாதசுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பத்ர தீப விழா நடைபெற்றது. உள், வெளி மண்டபங்கள், சுவாமி சந்நிதி கொடிமர மண்டபம், அம்மன் சந்நிதி மண்டபம் ஆகியவற்றில் பத்ர தீபங்கள் ஏற்றப்பட்டு, சுவாமி-அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரி லட்சுமி மாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் காலையில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், இரவில் அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரி தெப்பக்குளக்கரை அருள்மிகு சித்தி விநாயகா் கோயிலில் சிறப்பு வழிபாடு, பிற்பகலில் 11 வகை நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள், மாலையில் சகஸ்ரநாம அா்ச்சனை, அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றன.
ஆறுமுகனேரி காந்தி தெருவில் உள்ள அருள்மிகு கிழக்கத்திமுத்து சுவாமி கோயிலில் சிறப்பு அலங்கார, தீபாராதனைகள் நடைபெற்றது.