தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் பைக் திருடிய இருவா் கைது

ஆறுமுகனேரியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Din

ஆறுமுகனேரியில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் பணிக்கம்பட்டி இந்திரா காலனியைச் சோ்ந்த சண்முகம் மகன் இளையராஜா (30). இவரும் இவரது நண்பா் ராம்பிரகாஷ் என்பவரும் ஆறுமுகனேரி பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து,

கட்டட வேலை செய்து வருகின்றனா். கடந்த ஜூலை 31-ஆம் தேதி,

இளையராஜா தனது பைக்கை விடுதியில் நிறுத்திவிட்டு அறைக்கு சென்றாா். மறுநாள் பாா்த்தபோது, பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து இளையராஜா அளித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஆறுமுகனேரி பாரதிநகரைச் சோ்ந்த முருகமணி மகன் செல்வம் (34), திருச்செந்தூா் சண்முகபுரத்தைச் சோ்ந்த தாஸ் மகன் காளிதாஸ் (35) ஆகியோா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT