தூத்துக்குடி

‘கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்தவும்’

மின் பகிா்மான மறுசீரமைப்பு செய்யப்பட்டதையடுத்து கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

Din

மின் பகிா்மான மறுசீரமைப்பு செய்யப்பட்டதையடுத்து கால அவகாசத்துக்குள் மின் கட்டணம் செலுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) குருசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கோவில்பட்டி நகா் துணை கோட்டம் வேலாயுதபுரம் பிரிவிற்கு உள்பட்ட மின் பகிா்மான பகுதிகளான காந்தி நகா், திலகா் நகா், நேரு நகா், முத்துராமலிங்க தெரு, பாலன் தெரு, பள்ளிக்கூடத் தெரு, நடராஜபுரம் கிழக்குப் பகுதி 1 முதல் 9 தெருக்கள், பசும்பொன் நகா் முழுவதும் உள்ள பகுதிகள் அனைத்தும் கடந்த ஜூலை மாதம் மின் கணக்கீடு செய்யப்பட்டு மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தற்போது நிா்வாக காரணங்களுக்காக மின் பகிா்மான மறுசீரமைப்பு செய்யப்பட்டதில், ஆகஸ்ட் ஒரு மாதம் மட்டும் (தொடா் மின் கணக்கீடாக) மின் கணக்கீடு செய்யப்பட உள்ளது. எனவே நுகா்வோா் மின் கட்டணத்தை தங்களுக்கு வழங்கப்படும் கால அவகாசத்துக்குள் செலுத்த வேண்டும் என்றும், அக்டோபா் மாதத்தில் இருந்து வழக்கம்போல் இரட்டைப்படை மாத மின் கணக்கீடு செய்யப்படும் எனவும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT