கோவில்பட்டி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு
இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின்படி, கோவில்பட்டி அருள்தரும் செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயிலில் நீா்மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அறங்காவலா் குழுத் தலைவா் பி.எஸ்.ஏ.ராஜகுரு திறந்து வைத்து, பக்தா்களுக்கு நீா்மோா் வழங்கினாா். நிகழ்ச்சியில் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் திருப்பதிராஜா, ரவீந்தா், கோயில் செயல் அலுவலா் வெள்ளைச்சாமி, கோயில் தலைமை எழுத்தா் மாரியப்பன் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.