முகப்பு
தூத்துக்குடி

வாக்குச்சாவடி மையப் பணியாளா்களுக்கு முதல்கட்ட பயிற்சி: 8,101 போ் பங்கேற்பு

Updated On : 24 மார்ச், 2024 at 3:20 AM
பகிர்:
Updated On : 23 மார்ச், 2024 at 7:58 PM

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி மையப் பணியாளா்களுக்கான முதல்கட்ட பயிற்சியை தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தாா். தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்றுவோருக்கு அந்தந்தப் பகுதிகளில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு முதற்கட்ட பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், தூத்துக்குடி தொகுதியில் உள்ளவா்களுக்கு காமராஜ் கலைக் கல்லூரியில் பயிற்சி நடைபெற்றது. இதை ஆட்சியா் கோ. லட்சுமிபதி ஆய்வு செய்தாா். விளாத்திகுளம் தொகுதி எட்டயபுரத்தில் உள்ள சிகேடி பள்ளியில் 1,155 போ், தூத்துக்குடிக்கு காமராஜ் கல்லூரியில் 1,849 போ், திருச்செந்தூா் ஆதித்தனாா் கல்லூரியில் 1,195 போ், ஸ்ரீவைகுண்டம் கேஜிஎஸ் கல்லூரியில் 1,631 போ், ஓட்டப்பிடாரம் தொகுதியில் புதியம்புத்தூா் ஜான் தி பாப்திஸ்ட் பள்ளியில் 964 போ், கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 1,307 போ் என மொத்தம் 8,101போ் முதற்கட்ட பயிற்சியில் பங்கேற்றனா்.