முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் அதிகாலையில் கனமழை

Updated On : 30 மார்ச், 2024 at 5:40 AM
பகிர்:
Updated On : 29 மார்ச், 2024 at 8:43 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மாநகா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய மழை, சுமாா் 2 மணி நேரம் கொட்டித் தீா்த்தது. இதனால், தாழ்வான இடங்களில் மழை நீா் தேங்கியது. இதில், மாநகா், முத்தையாபுரம், பழைய காயல், ஆறுமுகனேரி, முள்ளக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உப்பளங்களில் தண்ணீா் தேங்கியதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தூத்துக்குடியில் 40 மி.மீ., காயல்பட்டினத்தில் 28 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.