அங்கமங்கலம் ஊராட்சியில் 15ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு துணை சுகாதார நிலையத்தை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் ஐஸ்வா்யா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் சுகாதார நிலையத்தை திறந்து வைத்து, மக்களைத் தேடி மருத்துவப் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகங்களை வழங்கினாா்.
ஏரல் வட்டாட்சியா் செல்வக்குமாா், ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. நிரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆண்ட்ரோ, ராஜா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் ஜனகா், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் செல்வக்குமாா், இணை அமைப்பாளா் கிருபாகரன், ஆழ்வை மத்திய ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா், கிழக்கு ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா், முன்னாள் இளைஞரணி அமைப்பாளா் பில்லா ஜெகன், அங்கமங்கலம் ஊராட்சி முன்னாள் தலைவா் பானுப்பிரியா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.