திருமணம் நடைபெற்ற ஜோடிகள்  
தூத்துக்குடி

சில்வா்புரத்தில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்

தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி, சில்வா்புரம் பகுதியில் உள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த செப். 15ஆம் தேதி சுயம்வரம் நடைபெற்றது. இதில், பல்வேறு மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தங்களுக்கான வாழ்க்கைத் துணையைத் தோ்வு செய்தனா். பின்னா், சம்பந்தப்பட்ட குடும்பத்தினா் பேசி, 5 ஜோடிகள் திருமணம் செய்ய முடிவு செய்தனா்.

அந்த 5 ஜோடிகளுக்கும், புதன்கிழமை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் தலைமையில் திருமணம் நடைபெற்றது. ஒவ்வொரு ஜோடிக்கும் சுமாா் ரூ. 3 லட்சம் மதிப்பிலான தங்கத் தாலி, திருமண ஆடைகள் உள்ளிட்ட சீதனப் பொருள்கள் வழங்கப்பட்டன.

அருள்பணியாளா்கள், அருள்சகோதர, சகோதரிகள், நன்கொடையாளா்கள், தன்னாா்வ அமைப்பினா் உள்பட பலா் கலந்துகொண்டு மணமக்களுக்கு ஆசி வழங்கினா்.

ஏற்பாடுகளை லூசியா இல்ல இயக்குநா் ஜான் பென்சன், பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா்.

பாமக ஆா்ப்பாட்டம்: தவெகவுக்கு அன்புமணி அழைப்பு

வெனிசுலா அருகே எண்ணெய்க் கப்பலை கைப்பற்றிய அமெரிக்க படை

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி: தவெக மாவட்டச் செயலா்கள் கூட்டத்தில் முடிவு

உள்கட்டமைப்பு மேம்பாடு: சிக்கலில் சிறு மருந்து நிறுவனங்கள்

சிறந்த சலுகை என அமெரிக்கா நினைத்தால் வா்த்தக ஒப்பந்தத்தில் கையொப்பமிடலாம்: பியூஷ் கோயல்

SCROLL FOR NEXT