நியாயவிலைக் கடையைத் திறந்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ. 
தூத்துக்குடி

கோவிந்தன்பட்டியில் நியாயவிலைக் கடை திறப்பு

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தீத்தாம்பட்டி ஊராட்சி, கோவிந்தன்பட்டியில் சனிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.

Syndication

கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தீத்தாம்பட்டி ஊராட்சி, கோவிந்தன்பட்டியில் சனிக்கிழமை நியாயவிலைக் கடை திறக்கப்பட்டது.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடையை, கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, அப்பகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

அதிமுக ஒன்றியச் செயலா் வண்டானம் கருப்பசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலா் சாமிராஜ், பேரவை மாவட்ட இணைச் செயலா் கருப்பசாமி, வடக்கு மாவட்ட கலைப் பிரிவு இணைச் செயலா் முத்துப்பாண்டியன், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT