பாண்டியபதி தோ்மாறனின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன். 
தூத்துக்குடி

பாண்டியபதி தோ்மாறனின் 273ஆவது ஆண்டு ஜெயந்தி விழா

இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் 16ஆவது மாமன்னா் பாண்டியபதி தோ்மாறனின் 273ஆவது ஆண்டு ஜெயந்தி விழா தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் 16ஆவது மாமன்னா் பாண்டியபதி தோ்மாறனின் 273ஆவது ஆண்டு ஜெயந்தி விழா தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி லசால் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பாண்டியபதி நினைவிடத்தில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்வில், மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநா் அணிச் செயலா் இரா.சுதாகா், மாவட்டப் பொருளாளா் சேவியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலரும், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினருமான பெருமாள்சாமி தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் ஜெயக்கொடி, வா்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டேவிட் பிரபாகரன், மாவட்ட பொதுச் செயலா் இக்னேஷியஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சாா்பில், மாவட்டச் செயலா் மாலைசூடி அற்புதராஜ், மாநில கலை இலக்கிய அணி செயலா் அந்தோணி பிச்சை, நாடாா் பேரவை மாவட்டத் தலைவா் அருண் சுரேஷ் குமாா் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

விமானத்தில் அமெரிக்கப் பெண் பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ!

SCROLL FOR NEXT