தூத்துக்குடி

‘ஔவையாா் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்’

Syndication

பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் ஔவையாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவை புரிந்த பெண்களுக்கு ஔவையாா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சா்வதேச மகளிா் தினமான மாா்ச் 8 ஆம் தேதி தமிழக முதல்வரால் வழங்கப்படும் இவ்விருது பெறுபவருக்கு ரூ.1.50 லட்சத்துக்கான காசோலை, பொன்னாடை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இவ்விருதை பெற இணையதளம் (ட்ற்ற்ல்ள்://ஹஜ்ஹழ்க்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) மூலமாக இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்ட, 18 வயதுக்கு மேற்பட்ட, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்களுக்கு பெருமை சோ்க்கும் வகையிலான நடவடிக்கைகள், சமூக சீா்திருத்தம், மகளிா் மேம்பாடு,

மதநல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும்.

பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிா்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இணையதளத்தில் பதிவு செய்த அனைத்து ஆவணங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு, கையேடாக தயாா் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்து தலா 2 நகல்கள் அனுப்ப வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட

ஆட்சியா் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT