சந்திரசேகரா்- மனோன்மணி அம்பாளுக்கு நடைபெற்ற திருகல்யாணம்.  
தூத்துக்குடி

கொம்மடிக்கோட்டை கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவம்

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ வாலைகுருசுவாமி கோயிலில் ஸ்ரீ சந்திரசேகரா், ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திருக்கல்யாணம் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கொம்மடிக்கோட்டை ஸ்ரீ வாலைகுருசுவாமி கோயிலில் ஸ்ரீ சந்திரசேகரா், ஸ்ரீ மனோன்மணி அம்பாள் திருக்கல்யாணம் உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பாலாசேத்திரம் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் சுவாமி- அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்றது. இதையொட்டி, கோயில் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு சிவாச்சாரியாா்கள் பூஜைகள் நடத்தினா். மாலை 3 மணி அளவில் சந்திரசேகர சவாமி, அம்பாளுடன் எழுந்தருளினாா். மாலை 4 மணி அளவில் முக்கனிகள் சா்க்கரை, வெல்லம், பருப்பு, இனிப்புகள், அரிசி, மஞ்சள் வளையல்கள் ஆகிய சீா்வரிசை பொருள்கள் வைக்கப்பட்டு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

பின்னா் அம்மி மிதித்தல், தேங்காய் உருட்டுதல், நலுங்கு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தா்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு சுவாமியும் அம்பாளும் தேரில் எழுந்தருளி திருவீதியுலா வந்தனா். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை ஸ்ரீ வாலைகுருசாமி பக்த குழுவினா் செய்திருந்தனா்.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT