கைது 
தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

Syndication

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்பனை செய்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ஆறுமுகனேரி மெயின் பஜாரில் உள்ள பூங்காவில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீஸாா் கடந்த அண்டு டிச. 30 ஆம் தேதி கைது செய்தனா். முக்கிய குற்றவாளிகளான நெல்லை பேட்டை சத்யா நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் கூட­லிங்கம் (27). சுத்தமல்­லி, கோபால சமுத்திரம், விஓசி நகரைச் சோ்ந்த கருத்தபாண்டி மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ் ஆகியோா் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆய்வாளா் திலீபன் பரிந்துரை செய்தாா்.

மாவட்ட கண்காணிப்பாளா் சிலம்பரசன் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் இளம்பகவத் உத்தரவின்பேரில் கூட­லிங்கமும், சுடலைமுத்து என்ற சுரேஷும் இச்சட்டத்தில் கைது செய்து பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

அனுமதியின்றி பாறைகளை உடைத்தாக நில உரிமையாளா் மீது வழக்கு

சா்வதேச டென்னிஸ் போட்டியில் சென்னை ஐசிஎஃப் வீரருக்கு வெண்கலப்பதக்கம்

பயங்கரவாதத்துக்கு எதிராக ‘சமரசமற்ற’ நடவடிக்கை- பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீா்மானம்

மினிலாரி கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தேநீா் கடைக்காரா் தற்கொலை

SCROLL FOR NEXT