தூத்துக்குடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எலக்ட்ரீஷியன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் சவேரியாா்புரத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஆறுமுகம் (40). எலக்ட்ரீஷியனான இவருக்கு குழந்தைகள் உள்ளனா்.
சனிக்கிழமை ஒரு வீட்டில் பணிக்காக சென்ற இவா், அங்கிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றாராம்.
புகாரின்பேரில், தூத்துக்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.