கோவில்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவில்பட்டி அறிஞா் அண்ணா தெருவில் வசித்து வரும் வித்யா, கடந்த மாதம் 25 ஆம் தேதி சென்னையில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவரது சகோதரா் ராமசாமி வெள்ளிக்கிழமை காலை, வித்யா வீட்டிற்கு சென்று பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த வெள்ளி விளக்கு, குங்குமச்சிமிழ் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வெள்ளி பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.