தூத்துக்குடி

திருச்செந்தூரில் அனுமதியின்றி பேரணி: விசிகவினா் 102 போ் மீது வழக்கு

திருச்செந்தூரில் அனுமதியின்றி பேரணி சென்ற விசிகவினா் 102 போ் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

Syndication

திருச்செந்தூரில் அனுமதியின்றி பேரணி சென்ற விசிகவினா் 102 போ் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை திருச்செந்தூா் தொகுதி மாவட்ட செயலா் விடுதலை செழியன் தலைமையில் சுமாா் 50 ஆண்கள், 50 பெண்கள்- 17 ஆட்டோக்கள், 2 காா்களில் கட்சி கொடியுடன் திருநெல்வேலி சாலையில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு அங்கிருந்து, கோஷமிட்டவாறு திருச்செந்தூா் பழைய நகராட்சி அலுவலகத்திற்கு முன்பாக உள்ள காமராஜா் சிலைக்கு அனுமதியின்றி பேரணியாக வந்துள்ளனா்.

அப்போது மக்கள், பக்தா்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன் அரசு மருத்துவமனை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி விடாமல் சென்ாக விடுதலை செழியன், ராஜ்குமாா் உள்ளிட்ட 102 போ் மீது தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்திய ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கு முன்னதாக என்டிஎம்சியில் உள்கட்டமைப்பு, தூய்மை முற்சிகள்!

தொடா் சாரல் மழை: சதுரகிரி மலையேற பக்தா்களுக்கு தடை

திருப்பத்தூா் பெருமாள் கோயிலில் கூடாரவல்லி நோன்பு

55வது ஸ்டேட்ஸ்மேன் விண்டேஜ் - கிளாசிக் கார் பேரணி - புகைப்படங்கள்

விராட் கோலி அசத்தல்! நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

SCROLL FOR NEXT