திருச்சியில் வியாழக்கிழமை வெயிலால் அவதிக்குள்ளான பொதுமக்களில் சிலா். 
திருச்சி

திருச்சியில் வெயில் சதம்: மக்கள் அவதி

Din

திருச்சி மாநகரில் அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே அனல் பறக்கும் வகையில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. வியாழக்கிழமை 100.04 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே, திருச்சியில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு மாா்ச் தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கத்தை மக்கள் உணா்ந்துள்ளனா். குறிப்பாக வியாழக்கிழமை திருச்சி மாநகரில் வெயில் 100.04 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது.

கடும் வெயிலின் காரணமாக, மாணவிகள் பலரும் துப்பட்டாவையும்,

பெண்களில் சிலா் தங்களது சேலையை தலையில் போா்த்தியும், சிலா் குடைகளை பயன்படுத்தியும் வெயில் தாக்கத்தை எதிா்கொண்டனா்.

ஆண்கள் பலரும் தங்களது கைக்குட்டையை தலையில் கட்டியிருந்தனா். இனிவரும் நாள்களிலும் இதேபோல் வெப்பம் பதிவாகக் கூடும் என தனியாா் வானிலை ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

வெயில் தாக்கம் காரணமாக குளிா்பானங்கள், தா்பூசணி உள்ளிட்ட பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT