திருச்சி கருமண்டபத்தில் பொறியியல் பட்டதாரி பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி கருமண்டபம் ஐஓபி காலனியைச் சோ்ந்த, பெங்களூரில் மென்பொறியாளராக உள்ள சிவா என்பவரின் மனைவி நவீஷா (28). சில ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவா்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் சில நாள்களாக தம்பதிக்கிடையே இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த நவீஷா தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சனிக்கிழமை காலை இறந்தாா். கண்டோன்மென்ட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.