முகப்பு
திருச்சி

ராமேசுவரம் - திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Updated On : 29 நவம்பர் 2025, 4:55 am IST
சிறப்பு ரயில்
பகிர்:

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக ராமேசுவரம்-திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, ராமேசுவரம் - திருப்பதி - ராமேசுவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி, ராமேசுவரம் - திருப்பதி சிறப்பு விரைவு ரயிலானது (06080) டிச. 2 முதல் 9- ஆம் தேதி வரையிலும், மறுமாா்க்கமாக, திருப்பதி - ராமேசுவரம் சிறப்பு விரைவு ரயிலானது (06079) டிச. 3 முதல் 10-ஆம் தேதி வரையிலும் இயக்கப்பட உள்ளது.

Advertisement

Advertisement

18 பெட்டிகளுடன் ராமேசுவரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்குப் புறப்படும் ரயிலானது மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி,

சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திருவண்ணாமலை, ஆரணி சாலை, வேலூா் கண்டோன்மென்ட், காட்பாடி, பாக்லா வழியாக திருப்பதிக்கு புதன்கிழமை காலை 10.10 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக, திருப்பதியிலிருந்து புதன்கிழமை முற்பகல் 11.55 மணிக்குப் புறப்படும் ரயிலானது மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக ராமேசுவரத்துக்கு வியாழக்கிழமை காலை 4.45 மணிக்குச் சென்றடையும்.