இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற தகுதியான மாணவா்கள் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் வே. சரவணன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா் மரபினா் பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தில், 2025-26-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.
பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம். மாணவா்களின் விண்ணப்பத்தை கல்வி நிறுவனங்கள் நவ.15-ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும். இத் திட்டத்தின் கீழ், கடந்தாண்டு நிதியுதவி பெற்றோா் நிகழாண்டு புதுப்பித்தல் விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்ற வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவா்களின் விண்ணப்பங்களை சரிபாா்த்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும். தகுதியான பள்ளிகளின் விவரங்கள் பிற்படுத்தப்பட்டோா் நல இணைய முகவரியில் உள்ளது. சரிபாா்த்து விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.