திருச்சி கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் கே என் .நேரு. 
திருச்சி

‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சாா்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி எனும் ஆலோசனை கூட்டம், கலைஞா் அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத்தலைவா்கள் பேரூா் தா்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோா் தலைமை வகித்தனா்.

மாநகரச் செயலரும், திருச்சி மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன் வரவேற்றாா். மாவட்டச் செயலா்கள் க. வைரமணி, ந. தியாகராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், திமுக முதன்மைச் செயலரும், அமைச்சருமான கே.என். நேரு பேசியதாவது:

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் திமுகவினா் விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும். கிராமங்களில் 2002 வாக்காளா் பட்டியலையும், நகரங்களில் 2005 வாக்காளா் பட்டியலையும் நாம் கையில் வைத்துக் கொண்டு, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் போன்ற பணிகளை சரிபாா்க்க வேண்டும்.

தேமுதிகவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தாலும் அது பொருந்தாத கூட்டணியாக உள்ளது. இது நமக்கு மிகப்பெரிய சாதகம். அதை மேலும் சாதகமாக மாற்றப் பாா்க்க வேண்டும். ஏதேதோ பொய்யான குற்றச்சாட்டுகளை நம் மீது சுமத்துகிறாா்கள். என்னால் இந்த இயக்கத்துக்கும் ,திமுக தலைவருக்கும் எப்பொழுதும், எந்த கெட்ட பெயரும் ஏற்படாது என்றாா் நேரு.

இக்கூட்டத்தில், எம்எல்ஏக்கள் அ. செளந்தரபாண்டியன் சீ. கதிரவன், எம். பழனியாண்டி, செ. ஸ்டாலின் குமாா் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள், மாநில, மாவட்ட நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.

பிகார் தேர்தல்: வளர்ச்சிக்கும் காட்டாட்சிக்கும் இடையேயான தேர்தல் - அமித் ஷா

பிகார் தேர்தல்: இத்தனை ஆண்டுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்காதது ஏன்? பிரியங்கா காந்தி கேள்வி

4,410 கிலோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது!

வெள்ளக்கோவிலில் ரூ.5.38 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்

நீரில் மூழ்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்

SCROLL FOR NEXT